லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: எம்.டி.எஸ். படிப்புக்கு அங்கீகாரம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீலேகாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ். படிப்புக்கு அங்கீகாரம் பெற இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான டாக்டர் முருகேசனுக்கு அக்கல்லூரியைச் சேர்ந்த சிலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க முயன்றபோது முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகா மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஸ்ரீலேகாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
ஸ்ரீலேகா வரும் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிபிஐ விசாரணைக்கு வர வேண்டும். அதன் பிறகு ஒரு வார காலத்திற்கு சிபிஐ முன்பு மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பின்னர் எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications