சிஏ தேர்வில் சாதனை படைத்த தமிழ்ப் பெண் பிரேமாவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு - ஜெ.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெற்றி பெறுவதே கடினம், படித்தால் உடனடி வேலை என்று அனைவராலும் சொல்லக் கூடிய கல்வியாக பட்டயக் கணக்கர் என்கிற சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி விளங்குகிறது.
இப்படிப்பட்ட கடினமான பட்டயக் கணக்கர் படிப்பை, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வரும் ஜெயக்குமார் என்பவரின் மகளுமான பிரேமா என்கிற தமிழ்ப் பெண் தன்னம்பிக்கையுடன் பயின்று, அண்மையில் நடைபெற்ற தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி அறிந்து நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித் துறையில் மிக உயரிய கல்வியாக கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்த செல்வி பிரேமாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை தேடித் தந்த பிரேமாவை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துறையில் மேலும் பல சாதனைகளை படைத்து, பல உயர் பதவிகளை அடைந்து, எல்லா நலமும் வளமும் பெற்று, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வருங்கால வாழ்க்கை அமைய வேண்டும் என்று பிரேமாவை மனதார வாழ்த்துகிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications