சோதனையை சாதனையாக மாற்றிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவுங்களேன்!

இந்த சிறுவன் மற்ற மாணவர்களை போல் அல்ல, ஒரு மாற்றுத்திறனாளி. அவனுடைய தாயாரும் மாற்றுத்திறனாளி. பட்டிவீரன்பட்டியில் என்.எஸ்.வி.வி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறான் பிறவிலேயே வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த அந்த சிறுவன் தன் குறைகளை நிறைவாக்கும் வகையில் கூடைப்பந்தாட்டப்போட்டியில் சாதனை படைத்திருக்கிறான்.
கடந்த ஆண்டு சத்தீஸகர் மாநிலத்தில் 14 வயதுக்குற்பட்டோருக்கான தேசிய அளவிலான கூடைப்பந்தாட்டப்போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி இருக்கிறார். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சராசரி மாணவர்கள் விளையாடும் இந்த போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
விஸ்ணுராமின் அனைத்து சாதனைகளும் பக்கபலமாக இருக்கிறார் இவரது தந்தை ரமேஸ்பாபு. முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரரான ரமேஸ்பாபு தன் மகனுக்கு தானே பயிற்சியளித்து அவரை பட்டை தீட்டி மெருகேற்றியுள்ளார்.
தன் மகனின் திறமை கூறிய ரமேஷ்பாபு, கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு செல்லும்போது, விஸ்ணுராமையும் அழைத்துச்செல்வேன். முதலில் என் விளையாட்டை வேடிக்கை பார்த்து வந்த அவனுக்கு, பின்னர் கூடைப்பந்து விளையாட்டில் மெல்ல மெல்ல ஈடுபாடு வந்தது.
விளையாட்டில் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகளை சைகைகளால் புரிந்து கொண்டான்.அவனுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளித்தேன். தீவிர பயிற்சிக்குப் பின் மற்ற மாணவர்களுடன் சகஜமாக விளையாட ஆரம்பித்தான் என்கிறார் அவரது தந்தை ரமேஸ்.
யோகாசனத்தில் பட்டயப்படிப்பு முடித்திருக்கும் ரமேஸ்பாபுவின் தீவிர சிகிச்சையால், விஸ்ணுராமின் கேட்கும் திறன் ஓரளவிற்கு மேம்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் யார் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்காத விஸ்ணுராம். தற்போது அருகில் சென்று அழைத்தால் திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
பட்டிவீரன்பட்டிகும், வத்தலக்குண்டு அணிக்கும் இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்டப்போட்டியில் பட்டிவீரன் பட்டி அணிக்கு கிடைத்த புள்ளிகள் 41 இதில் விஸ்ணுராமிற்கு கிடைத்த புள்ளிகள் 37. இந்த போட்டிக்கு பிறகு தான் அவனது திறமை, வெளி உலகத்திற்கு தெரியவந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி, தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டான்.
சத்தீஸ்கரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி தோல்வி அடைந்தாலும், சிறப்பாக செயல்பட்ட விஸ்ணுராமிற்கு அந்தப் போட்டியின் சிறந்த வீரர் என்ற பரிசு கிடைத்தது.
பொதுப்பிரிவு மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக வரும் ஏப்ரல் மாதம் ஏற்காடு செல்லவிருக்கிறார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
விஸ்ணுராமின் தாய் சர்மிளா. மூளை முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் சரிவர நடக்கவோ, பேசவோ முடியாது. ஏழ்மை காரணமாக விஸ்ணுராமை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளியில் சேர்ககவில்லை. என்றுகூறும் அவரது தந்தை, அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கத் தன்னிடம் போதிய வருமானம் இல்லை என கவலையடைந்துள்ளதார்.
யாராவது உதவி செய்ய விரும்பினால் 9626754105 எண்ணில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி மாணவரான விஷ்ணுராமிற்குத் தேவையான உதவிகளை செய்யலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications