குடியரசு தினம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் குடியரசுதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடக்கிறது.
கலெக்டர் சமயமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். விழாவில் உயர் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சீரிய முறையில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குடியரசுதின விழாவை முன்னிட்டு நெல்லையில் கமிஷனர் சுனில்குமார் சிங், துணை கமிஷனர் ராஜராஜன் உத்தரவுப்படி உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளது.
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் பொருட்கள் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்படுகிறது. லாட்ஜ்களில் சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது தங்கியுள்ளார்களா என சோதனை நடக்கிறது. பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடத்துகின்றனர். இன்று மாலை முதல் மைதானம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளது.
டி.ஐ.ஜி. சுமித்சரன், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் வாகன சோதனை மும்முரமாக நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படைத்தளம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பலப்படுத்தியுள்ளது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications