பாக். சிறையில் குழாய் நீரில் துணி துவைத்ததற்காக இந்தியர் அடித்துக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் சமேல் சிங் சிறை அதிகாரிகள் அடித்து நொறுக்கிய இரண்டாவது நாள் மரணம் அடைந்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியரான சமேல் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் தண்டனை காலம் விரைவில் முடியவிருந்தது. இந்நிலையில் சமேல் சிங் மரணம் அடைந்தார்.
கோட் லாக்பட் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையான பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் தஹ்சீன் கான் கூறியதாக ஊடகங்கள் கூறியிருப்பதாவது, சமேல் சிங் கடந்த 15ம் தேதி ஒரு குழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைத்தற்காக சிறை அதிகாரிகள் அவரை அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஜின்னா மருத்துவமனையில் 2 நாட்கள் கழித்து இறந்தார். சிறை அதிகாரிகள் இந்தியர்களைப் பற்றியும், சிறுபான்மையினரைப் பற்றியும் அவதூறாகப் பேசினர். அந்த சிறையில் உள்ள சரப்ஜித் சிங் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமேல் சிங் கடந்த 15ம் தேதியே இறந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமேல் சிங்கின் மரணம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதா அல்லது பாகிஸ்தானிலேயே இறுதிச் சடங்குகளை செய்து விடுவதா என்பது குறித்து அவரது குடும்பத்தாரின் வார்த்தைக்காக இந்திய அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமேல் சிங்கை பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் அடித்தது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications