லோக்சபா தேர்தலைவிட சட்டசபை தேர்தலே முக்கியம்- விஜயகாந்த்தின் புது கணக்கு!

Subscribe to Oneindia Tamil

Vijayakath
சென்னை: 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்ற கருத்து தேமுதிகவில் வலுத்து இருக்கிறது.

தேமுதிகவின் 8-வது பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையில் நடைபெற்றது. லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிக இணையும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. தேமுதிகவின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த் தெரிவித்து வந்த கருத்துகளும் இந்த யூகத்தை உறுதிப்படுத்தியே வந்தன.

ஆனால் நேற்றைய தேமுதிக பொதுக்குழுவில், 2014- லோக்சபா தேர்தலுக்கு ஒரு கூட்டணி அமைக்கப் போய் அது சரிவராமல் போனால் 2016 சட்டசபை தேர்தலிலும் பாதித்துவிடுமே என்ற கருத்தை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்வைத்திருக்கின்றனர்.

மேலும் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக- அதிமுகவுக்கு மாற்றான ஒரு வலுவான கட்சியாக நிலைகொள்வதற்கான வியூகத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்று பலரும் பொதுக்குழுவில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒரு எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் தேமுதிக, வரும் லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டிய அவசிய்ம் இருக்கிறது.. அப்போதுதான் கட்சிக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

இன்னும் சிலர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமலே சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிட்டால் என்ன என்ற கருத்தையும் முன்வைத்திருக்கின்றனர்.

கூட்டணி குறித்து கூட்டத்தில் விஜய்காந்த் பேசுகையில், கூட்டணி பற்றி எனக்கு முடிவு கொடுத்திருக்கிறீர்கள்.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. முதலில் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஊர்தோறும் கட்சிக் கொடிகளை ஏற்றுங்கள், 2014ம் ஆண்டு தேர்தலுக்காக (நாடாளுமன்றத் தேர்தல்) 2016ம் ஆண்டு தேர்தலை (சட்டமன்றத் தேர்தல்) நாம் பலி கொடுக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.

பொதுவாக லோக்சபா தேர்தலில் 'காசு செலவழித்து' காயத்தை வாங்கிக் கொண்டு சட்டசபை தேர்தலை சந்தித்து 'பெருங்காயம்' ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கருத்தாக இருக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+