தெலுங்கானா: போர்க்களமான ஹைதராபாத்! மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்! தலைவர்கள் கைது!!

நாளை இறுதி நாள்
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அனேகமாக தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகிவிடும் என்றே கூறப்படுகிறது. அப்படி தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகுமானால் 'ராயலசீமா' என்ற தனி மாநிலத்துக்கான கோரிக்கையும் வலுப்பெறும். அத்துடன் ஹைதராபாத் எந்த பகுதிக்கு தலைநகர் என்ற குழப்பமும் உருவாகும்.
டி.ஆர்.எஸ். போராட்டம்
இத்தகைய பதற்றமான சூழலில் 36 மணி நேர போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது. இந்த 36 மணி நேர தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமியின் தலைவர் சந்திரசேகர்ராவின் மகன் ராமாராவ் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்திரா பூங்கா நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் ஹைதராபாத் நகரின் பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏக்கள் மகாத்மா காந்தி சிலை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர் இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகை- போலீஸ் தாக்குதல்
தெலுங்கா தனி மாநில கோரிக்கைக்காக கடந்த 3 ஆண்டுகளாக உக்கிரமான போராட்டத்தை நடத்தி வருபவர் உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள். இன்று தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்த்து பரிந்துரை அனுப்பியதற்காக ஆளுநர் நரசிம்மனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்காக உஸ்மானியா பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியும் நடத்தப்பட்டன. மாணவர் போராட்டங்களால் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக 10 கிலோ மீட்டர் தொலைவில் போர்க்களம் போல் காட்சி தருகிறது. இதனால் ஹைதராபாத் நகரமெங்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹைதராபாத் மட்டுமின்றி தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருப்பதால் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தெலுங்கானா பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications