நெல்லையில் அஜீரணத்தால் பெண் யானை மரணம்
நெல்லை: நெல்லை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று அஜீரணத்தால் மரணம் அடைந்தது.
நெல்லை மாவட்டத்தில் களக்காடு முதல் முண்டந்துறை வரையிலும் புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இந்த வனப்பகுதியில் யானைகளும் உள்ளன. மணிமுத்தாறு அணையில் இருந்து மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் கோயில்தட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு யானை உலவி வந்ததை வன ஊழியர்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் பார்த்துள்ளனர். நேற்று அந்த யானை இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த புலிகள் காப்பக துணை இயக்குநர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தனர். சுமார் 45 வயதுடைய பெண் யானை உணவு ஜீரணமாகாமல் இறந்துள்ளது தெரிய வந்தது. நோயுற்ற யானையை புதைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் அங்கேயே தீ வைத்து எரியூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் யானைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு அவைகள் ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளில் கண்ணில்பட்டதை உண்டு செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடையநல்லூர் வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு பெண் யானை இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications