ரத்தக்களறிக்கு மத்தியில் குவாகுவா... சிரிய அதிபரின் மனைவி 4வது முறையாக கர்ப்பம்
பெய்ரூட்: பெரும் ரத்தக்களறியாகிக் கிடக்கும் சிரியாவில் அதிபர் குடும்பத்துக்கு மகிழ்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அதிபர் அஸ்ஸாத்தின் மனைவி அஸ்மா அல் அஸ்ஸாத் 4வது முறையாக கர்ப்பமாகியுள்ளாராம்.
இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிரிய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம். அஸ்மாவுக்கு 37 வயதாகிறது. இவர் இங்கிலாந்தில் பிறந்தவர் ஆவார்.
அஸ்மா அவ்வளவாக தற்போது வெளியில் காணப்படுவதில்லை. அதிலும் சிரியாவில் ரத்தக்களரி வெடித்த பிறகு அவரை அதிகம் காண முடிவதில்லை. இந்த நிலையில்தான் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை பெய்ரூட் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும் அலப்போ ஆற்றுப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 65 ஆண்களின் இறந்த உடல்கள் மீட்கப்பட்ட செய்தி வெளியான அதே நாளில் இந்த கர்ப்பச் செய்தியும் வெளியாகியுள்ளது.

டாக்டர் மூலம் வெளியான செய்தி
அஸ்மாவைப் பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்தாராம். இந்தத் தகவல் சில அராபியர்கள் மூலம் வெளியில் கசிந்து தற்போது செய்தியாக வந்துள்ளது. சிரிய அரச குடும்பத்துக்கு நெருக்கமான அல் அக்பர் என்ற நாளிதழ்தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாலைவனத்து ரோஜா
அஸ்மா மிகவும் அழகானவர். பேஷன், மேக்கப்பில் அதீத ஆர்வம் கொண்டவர். அவரை பாலைவனத்து ரோஜா என்று ஒருமுறை வோக் பத்திரிக்கை வர்ணித்திருந்தது. லண்டனில் பிறந்தவர் அஸ்மா.

சிரியாவில் அஸ்மா.. இங்கிலாந்தில் எம்மா
அஸ்மா முஸ்லீமாக இருந்தாலும் கூட இங்கிலாந்தில் பிறந்தவர் என்பதாலும், கிறிஸ்தவ மதத்தின் மீது ஈடுபாடு கொண்டவர் என்பதாலும் தனது பெயரை எம்மா என்றும் அவர் மாற்றி வைத்துள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்
அஸ்மா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். அதேபோல பிரெஞ்சு இலக்கியத்திலும் பட்டம் பெற்றவர். அழகாக ஆங்கிலம் பேசுபவர். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் படித்தவர். வங்கியாளராக ஜே.பி. மார்கன் வங்கியில் பணியாற்றியவரும் கூட. அங்குதான் அஸ்ஸாத்தை சந்தித்து காதல் கொண்டார் அஸ்மா.

2 வருடமாக போர்க்களமாகியுள்ள சிரியா
சிரியா கடந்த 2 வருடமாக உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்து, தகித்துக் கொண்டிருக்கிறது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் அஸ்ஸாத் பதவி விலகுவதாக இல்லை. இந்தநிலையில்தான் அவரது மனைவி 4வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

மக்கள் கோபம்
நாடே இப்படி ரத்த வெள்ளத்தில் மூழ்கி துடித்துவரும் நிலையில் அஸ்ஸாத் மட்டும் நிம்மதியாக, ஜாலியாக, உற்சாகமாக இருந்து வருவதையே இந்த கர்ப்பச் செய்தி காட்டுவதாக சிரிய மக்கள் கோபத்துன் கூறுகின்றனராம்.

ரஷ்ய போர்க்கப்பலில் வைத்து கர்ப்பமானாரா..?
சிரியாவில் பெரும் உள்நாட்டுப் போர் மூண்டிருந்ததால், அஸ்ஸாத் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும்,அங்குதா
ன் அவர் பாதுகாப்புடன் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அங்கு இருந்தபோதுதான் அஸ்மா கர்ப்பமானாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications