இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த அளவிற்கு இருக்கிறது?

Subscribe to Oneindia Tamil

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரமாக செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிக்கை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் எந்தளவிற்கு இருக்கிறது என்றால் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்றே கூறலாம். பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 140வது இடத்தில் உள்ளது. இது, கடந்த ஆண்டு இருந்த பட்டியலில் இருந்த இடத்தை விட 9 இடங்கள் கீழ் இறங்கிவிட்டது.

2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்கின்றனர். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

பத்திரிக்கை சுதந்திர குறியீட்டு எண்

உலக அளவிலான 2013ம் வருட பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்தப் பட்டியலில் இந்த நாடுகள்தான் முதலில் இருந்தன. இந்த மூன்றுமே ஐரோப்பிய நாடுகள்.

கடைசி மூன்று நாடுகள்

துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.

சீனாவிற்கு 173 வது இடம்

கடந்த ஆண்டை விட சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரிகை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை.

இந்தியாவிற்கு சரிவு

இந்தியா 140வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா131 வது இடத்தில் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+