நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ஆளுநர் உரையில் ரோசய்யா
சென்னை: நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பயன் பெறும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சநாட்டில் புதிய தேயிலைத் தொழிற்சாலை தொடங்கப்படும்.
15 கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் அருகில் தேயிலை தொகுப்பு பொது சேவை மையம் ஒன்று அமைக்கப்படும்.
டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அரசு உடனடி நட வடிக்கைகளைத் திறம்பட எடுத்துள்ளது. மேட்டூர் அனல்மின் உற்பத்தித் திட்டத்தின் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட மூன்றாவது அலகு, சோதனை உற்பத்தியை ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வரும் வல்லூர் மின் உற்பத்தித் திட்டத்தின் 500 மெகா வாட் திறனுள்ள முதல் அலகு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தலா 500 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட, இந்த கூட்டுமுயற்சித் திட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது அலகுகள் முறையே 2013-ம் ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் திங்கள் முதல் செயல்படத் தொடங்கும்.
மண்டலங்களுக்கு இடையே மின்சாரம் கடத்தும் திறனுக்கான இணைய ஒப்பந்தப்புள்ளியில் பங்கெடுத்து, 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 500 மெகா வாட் அளவிற்கு மின்வழிப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனம் வெற்றிகரமாக ஒப்பந்தம் பெற்றுள்ளது. அதிக மின்சாரம் தேவைப்படும் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் ஒடிஷா மாநிலத்திலிருந்து 150 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 660மெகாகவாட் எண்ணூர் விரிவாக்கத் திட்டத்திற்கு ஏற்கனவே உலகளாவிய ஒப்பந் தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. உடன்குடி மற்றும் எண்ணூரில் 2,640 மெகாவாட் மொத்த உற்பத்தித் திறன் கொண்ட, தலா 2x660 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும். சூரிய மின்சக்திக்கு இலக்கிடப்பட்டுள்ள 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியை இந்த அரசு எட்டும் என்று அவர் கூறியிருந்தார்.
5 நாள் கூட்டம்
சட்டசபைக் கூட்டம் இன்று முடிவடைந்தவுடன் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதில் வரும் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை சட்டசபைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. நாளையும் நாளை மறுநாளும் அரசு விடுமுறை. 4-ந் தேதி திங்கள்கிழமையன்று மறைந்த 14 முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அத்துடன் அன்றைய கூட்டம் முடிவடையும்.
பின்னர் 5-ந்தேதி அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும். அதன் மீது 6, 7-ந்தேதிகளில் தொடர்ந்து விவாதம் நடைபெறும். 8-ந்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதமும் முதல்வரின் பதிலும் இடம் பெறும். பின்னர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications