விரைவில் பூலித்தேவன் தபால் தலை -சிபல் உறுதி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் தபால் தலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் உறுதியளித்துள்ளார்.
இத்தகவலை விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் 18 ம் நூற்றாண்டில் பிறந்தவர் பூலித்தேவர்.

கட்டபொம்மன் காலத்திற்கு முன்பே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட மன்னர். இவரது தபால் தலை வெளியிட, நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, விரைவில் தபால் தலை வெளியிடப்படும் என, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார் என்றார் தாகூர்.












Click it and Unblock the Notifications