காவிரி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால் மத்திய அரசு தப்ப முடியாது.. கர்நாடகமும் டபாய்க்க முடியாது
டெல்லி: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழ் அதாவது கெஜட்டில் வெளியிட்டால் கர்நாடக அரசு அந்தத் தீர்ப்பை நிறைவேற்றியே ஆக வேண்டும். மேலும் மத்திய அரசும் தனது பொறுப்பிலிருந்து நழுவிப் போக முடியாது. கர்நாடக அரசைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்படும.
தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையிலான மிக முக்கிய நதி நீர்ப் பிரச்சினை இந்த காவிரி நீர்ப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மறைந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி இடைக்கால தீர்ப்பைப் பிறப்பித்தது.
அதில், மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. அடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா தனது நீர்த் தேக்கங்களிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்றும், கர்நாடகா தனது பாசனப் பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும், இடைக்கால ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, மாதாந்திர மற்றும் வாராந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு நீர் விடுவிக்க வேண்டும் என்றும், இந்த இடைக்கால ஆணை இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால் இதை கர்நாடகம் பின்பற்றவில்லை. மத்திய அரசும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த இடைக்காலத் தீர்ப்பை 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இருப்பினும் இது இடைக்காலத் தீர்ப்பு என்பதால் இதை கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை வெளியிட்டதோடு, இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் பரிந்துரை செய்தது.
ஆனால் இங்குதான் மத்திய அரசு அரசியலில் இறங்கியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை முதலில் கெஜட்டில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. இதன் காரணமாக இந்த நடுவர் மன்றத் தீர்ப்பை சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது கர்நாடக அரசு இதை கண்டுகொள்ளவில்லை, அதை மத்தியஅரசும் தட்டிக் கேட்கவில்லை. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டி வந்தது.
அரசிதழில் இந்த தீர்ப்பு இடம் பெறாமல் போனதால் கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை மட்டும்லலாமல் இழப்பீடுகளைப் பெறவும் தமிழகத்திற்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.
எனவே முதலில் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து மத்திய அரசைக் கோரி வருகிறது. ஆனால் கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாத மத்திய அரசு இதைப் புறக்கணித்து வருகிறது. இதுகுறித்து இதுவரை அது கண்டு கொண்டதே இல்லை.
கெஜட்டில் தீர்ப்பு வெளியானால், மத்திய அரசுக்கும் சட்டப்பூர்வ பொறுப்பு வந்து சேரும். கர்நாடகம் தீர்ப்பை அமல்படுத்துவதும் சட்டப்பூர்வமாகும். அதைச் செய்ய அது தவறும்போது மத்திய அரசு அதை செயல்படுத்த உத்தரவிட முடியும், நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல தமிழகமும் உரிமையுடன் தனது பங்கீட்டைப் பெற முடியும்.
மேலும் நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றினை அமைக்கவும் மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
அரசிதழில் ஏன் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வந்தபிறகு தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட முடியும் என்று மத்திய அரசு சப்பைக் காரணத்தைக் கூறுகிறது. ஆனால் இந்த மேல் முறையீட்டுக்கும், தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கும் எந்தத் தடையும் இல்லை.
இப்படி தமிழகத்தை இதுவரை சற்றும் கண்டு கொள்ளாமல் டபாய்த்துக் கொண்டிருந்த மத்திய அரசு இப்போது பொறியில் சிக்கிய எலி போல உச்சநீதிமன்றத்திடம் போய் சிக்கிக் கொண்டுள்ளது.
ஆனால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கெஜட்டில் வெளியானால்தான் தமிழக விவசாயிகளுக்கு விமோச்சனம் என்பதால் உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு தமிழக விவசாயிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications