For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலாலாவிற்கு மீண்டும் அபரேசன்... நலமுடன் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவமனை தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Malala Yousafzai
லண்டன்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பள்ளி மாணவி மலாலாவிற்கு இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். .

கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கிலாந்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் மலாலா. அவர் குணமடைந்ததை அடுத்து கடந்த மாதம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் ஆபரேஷனுக்காக அவர் மீண்டும் குவின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை டைட்டானியம் பிளேட்டும், உட்செவி கருவியும் பொருத்துவதற்காக அவருக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. ஆபரேஷன்களுக்கு பிறகு அவர் கண் விழித்து, டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசினார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் வேகமாக குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் மருத்துவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாணவி மலாலாவின் சேவையை பாராட்டி அவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

English summary
A Pakistani schoolgirl who was shot in the head by the Taliban has undergone surgery in Birmingham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X