தமிழர்களைக் கொன்று குவித்த பின் 3வது முறையாக திருப்பதி வரும் ராஜபக்சே... பலத்த பாதுகாப்பு
திருப்பதி: ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த பின்னர் இதுவரை 2 முறை திருப்பதிக்கு பத்திரமாக வந்து போய் விட்ட ராஜபக்சே, தற்போது 3வது முறையாக வருகிற 8ம் தேதி வரவுள்ளார். அவருக்கு இந்தமுறை மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டப் போவதாக தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளதால், திருப்பதி வரும் ராஜபக்சேவுக்காக பலத்த பாதுகாப்புக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் ஏற்பாடு செய்துள்ளனவாம்.
முதலில் கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் வருகிறார் ராஜபக்சே. பின்னர் புத்தகயா செல்லும் அவர் அங்கு வழிபாடு நடத்துகிறார். பின்னர் அதே விமானத்தில் ஏறி ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் திருமலைக்குப் புறப்படுகிறார். திருப்பதி போய் சாமி தரிசனம் செய்து விட்டு இலங்கை திரும்புகிறார்.
தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீணடும் வருவதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பைக் காட்ட தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் ராஜபக்சேவுக்கு ஆந்திர அரசும், மத்திய அரசும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் இதற்காக திருப்பதி வந்துள்ளனர்.
திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி கோவில் வரை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக வேலூர், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் தமிழக போலீசார் குவிக்கப்படுகின்றனர்.
அதேபோல திருப்பதி கோவிலிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கோவிலிலும் பதட்டமான சூழலே காணப்படுகிறது.
தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு -ராமதாஸ்
இதற்கிடையே ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தனித் தமிழ்ஈழம் அமைப்பதே ஒரே தீர்வு என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் மற்றும் விடுதலைக்கு பின்னர் இலங்கையை ஆட்சி செய்த சிங்களப் பேரினவாதிகளின் சதியால், இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர். இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என்பதால், அதை அடைவதற்காக போராடி வந்தனர்.
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வுகாண 1987ம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, 13வது அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி இதை ஏற்க ஈழத் தமிழர்கள் மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு , தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக்கொண்டது.
அதன்பின்னர், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வியடைந்தது. போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு வந்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியபோது, ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதாக ராஜபக்சே உறுதியளித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை, அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டிணா சந்தித்த போதும், 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படியான அதிகாரங்கள் மட்டுமின்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்கி தமிழர்கள் தன்னாட்சியுடன் வாழ வகைசெய்யப்படும் என ராஜபக்சே உறுதி அளித்திருந்தார். இதே வாக்குறுதியை அவர் பலமுறை இந்தியாவுக்கு வழங்கியிருந்தார்.
ஆனால், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ராஜபக்சேவின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வகை செய்வோம் என்று கூறிவரும் இந்திய அரசை அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து போரின் போதும், போருக்குப் பிறகும் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அரசு, இப்போது சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம்மை எட்டி உதைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்திய அரசு இனியாவது உணர வேண்டும்.
தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கூட வழங்காமல் அடிமைகளாகவே வைத்திருக்கத் துடிக்கும் சிங்களப் பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து தமிழர்கள் கண்ணியமாகவோ அல்லது சுயமரியாதையுடனோ வாழ முடியாது என்பதை இந்தியா உணர வேண்டும். காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருவதைப் போல, இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதால் அதை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications