விருதாச்சலம் சிறுவன் கொலை: குற்றவாளிக்கு தூக்கு… சுப்ரீம் கோர்ட் உறுதி!

விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன்- மகேஸ்வரி தம்பதியின் மகன் சுரேஷ். இவன் கடந்த 2007-ம் ஆண்டு பள்ளி சென்று திரும்பும்போது சுந்தர் என்பவரால் கடத்தி கொலை செய்யப்பட்டான்.
இந்த வழக்கில் சுந்தர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சுந்தர்தான் குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுந்தர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடலூர் நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் முடிவில் உயர்நீதிமன்றம் உறுதி செய்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சுந்தரின் தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனை நிறைவேற்றும் தேதியை கடலூர் நீதிமன்றம் அறிவிக்கும்.












Click it and Unblock the Notifications