சைக்கிள் மீது கிரிக்கெட் பந்து பட்டதற்காக அடித்து நொறுக்கிய ஆசிரியர், மரணமடைந்த 12 வயது மாணவன்
சம்பரான்: பீகாரில் கிரிக்கெட் பந்து சைக்கிளில் பட்டதற்காக ஆசிரியர் அடித்ததில் 12 வயது மாணவன் மரணம் அடைந்தார்.
வட பீகார், சம்பரான் மாவட்டம் பகரிதயாலில் உள்ளது மாடர்ன் பப்ளிக் பள்ளி. அந்த பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்த மாணவன் சோட்டன் சிங் என்பவரின் மகன் சேகர் குமார்(12). கடந்த சனிக்கிழமை இரவு சேகர் குமார் வீசிய கிரிக்கெட் பந்து பட்டு ஆசிரியர் ஒருவரின் சைக்கிள் சேதமடைந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் சேகரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பள்ளியின் உரிமையாளர்கள் காசி ஷா மற்றும் அவரது மகன் பப்பு ஜெய்ஸ்வால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். காசி ஷாவை கைது செய்த போலீசார் அவரது மகனை தேடி வருகின்றனர்.
ஹாஸ்டலில் ஆசிரியர் யாரும் இல்லாததால் பிற மாணவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் பரிசோதனையில் மாணவன் தற்கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக சேகர் ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தன்னை அடித்துக் கொண்டே இருப்பதாக தனது தாய் சந்தா தேவியிடம் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications