விசாரணைக்கு அழைத்துச் சென்று சிறுமியை காவல் நிலையத்தில் கற்பழித்த போலீஸ்காரர்
சித்தூர்: ஆந்திராவில் விசாரணைக்கு அழைத்துச் சென்று சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குன்னூர்குட்டாவைச் சேர்ந்தவர் ரவி. அவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் ரவி தங்கள் மகளை கடத்திவிட்டதாக ஸ்ரீரங்கராஜபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ரவியின் பெற்றோர், உறவுக்கார சிறுமி பாவனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் உறவினர்கள் சிலரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரவு முழுவதும் அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். ரவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 5 பேரை ஒரு அறையில் அடைத்துவிட்டு பாவனாவை தனியாக விசாரிக்க வேண்டும் என்று குடிபோதையில் இருந்த போலீஸ்காரர் கோபி தெரிவித்துள்ளார். பாவனாவை மட்டும் வேறு அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். சிறுமி அலறியும் அப்போது பணியில் இருந்த 2 போலீசார் கண்டுகொள்ளாமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர்.
மறுநாள் காலை பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டரிடம் பாவனா தனக்கு நடந்த கொடுமை குறித்து புகார் கொடுத்தார். ஆனால் அவரும் அதை கண்டுகொள்ளாததால் எஸ்.பி. காந்திராஜாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை ஏற்றுக் கொண்ட எஸ்.பி. கோபி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் எஸ்.பி. அன்னபூர்ணா ரெட்டிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோபி கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்தபோது அதை கண்டுகொள்ளாமல் இருந்த 2 போலீசார் மற்றும் புகாரை அலட்சியம் செய்த சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications