குடிக்கப் பணம் தாங்கடா... 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டிய +1 'அண்ணாக்கள்'...!
சேலம்: குடி குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் ரொம்பப் பழைய பழமொழி. இப்போது அதையும் தாண்டி ரொம்பக் கேவலமான நிலைக்கு சமுதாயத்தை இட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளது குடிப்பழக்கம். சேலம் அருகே தான் குடிக்கப் பணம் கேட்டு 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டியுள்ளார்கள் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் ஐவர்.
ஒரு ஊரில் மது குடிப்பதற்காக பள்ளிக்கூடத்துப் பெஞ்ச்சை எடுத்துப் போய் விற்று மது அருந்திய மாணவர்களை தமிழகம் சில மாதங்களுக்கு முன்பு பார்த்தது.
குடித்து விட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை மிரட்டிய மாணவர்களையும் தமிழகம் பார்த்துள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதற்கு பணம் கேட்டு மாணவர்களை, அதிலும் சிறார்களைப் போய் மிரட்டியுள்ளனர் பிளஸ் ஒன் படிக்கும் ஐந்து மாணவர்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி விட்டு மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், ப்ளஸ் 1 படிக்கும் ஐந்து மாணவர்கள், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஏற்கனவே, அந்த மாணவர்கள் ஐந்து பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பள்ளிக்கு சென்ற ஆத்தூர் போலீஸார், இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சம்பந்தப்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
பள்ளி மாணவர்கள், குடிபோதையில் சக மாணவர்களிடம் ரகளை செய்யும் சம்பவங்களால் மற்ற மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மது அரக்கன் இன்னும் என்னென்ன அட்டூழியங்களையெல்லாம் செய்யப் போகிறானோ...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications