பேசி மயக்கும் சாகசக்காரி... மாணவனைக் கடத்திய பெண் குறித்து கள்ளக்காதலன் 'பதக்' தகவல்!

Subscribe to Oneindia Tamil

Malarvizhi
நெல்லை: கணவரை விட்டு விட்டு என்னுடன் வந்தார். இப்போது சின்னவயது மாணவனை இழுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இவர் பேசிப் பேசிய மயக்கும் சாகசக்காரி. நானும் அதில்தான் விழுந்து ஏமாந்தேன். இப்போது அந்த மாணவனும் ஏமாந்துள்ளான் என்று கூறியுள்ளார் தென்காசியில் மாணவனுடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேனி பெண் மலர்விழியின் கள்ளக்காதலன் சிலேந்திரன்.

தென்காசியில் வசித்து வந்தவர் சிலேந்திரன். இவருடன் இருந்தவர் மலர்விழி என்கிற தனலட்சுமி. இவர்கள் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரிஜினல் தம்பதி கிடையாது. மலர்விழி தனது கணவரை விட்டு விட்டு சிலேந்திரனுடன் ஓடி வந்தவர். சொந்த ஊர் இருவருக்கும் தேனி மாவட்டமாகும்.

வந்த இடத்தில் 18 வயதான பாலிடெக்னிக் மாணவன் மணிகண்டனைப் பிடித்து விட்டார் மலர்விழி. இவருக்கு வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். சிலேந்திரன் மறுபடியும் தேனி பக்கமே வந்து விட்டார்.

இந்த நிலையில் மலர்விழி குறித்து பல பரபரப்புத் தகவல்களை சிலேந்திரன் வெளியிட்டுள்ளார்.

சிரித்துச் சிரித்துப் பேசி மயக்குவார்

மலர்விழி சிரித்து பேசி ஆட்களை மயக்குவதில் வல்லவர். அனைவருடன் நெருங்கி பேசி பழகி தன் வசப்படுத்தி கொள்வார். அவ்வாறுதான் என்னுடன் பேசி காதலை வளர்த்து கொண்டார். அதனாலேயே அவரது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு, விட்டு என்னுடன் வந்து விட்டார்.

கண்டித்தேன், திருந்தவில்லை

தென்காசியில் வந்த சில நாட்களிலேயே மாணவர் மணிகண்டனின் குடும்பத்தினருடன் நெருக்கி பேசி பழக ஆரம்பித்தார். மாணவனுடன் அதிக நெருக்கம் காட்டியதும் அதனை நான் கண்டித்தேன். ஆனாலும் அதனை அவள் கண்டு கொள்ளவில்லை.

அவர் ஓடி விட்டார்..நானும் மறுமணம் செய்துவிட்டேன்

இந்த நிலையில்தான் மணிகண்டனுடன், தனலட்சுமி ஓட்டம் பிடித்து விட்டார். இதனால் நானும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மாணவனுடன் தலைமறைவாகிவிட்ட அப்பெண்ணை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+