குவைத்தில் மன்னரை விமர்சித்த 3 மாஜி. எம்.பி.க்களுக்கு 3 ஆண்டு சிறை
குவைத்: குவைத் மன்னரை பற்றி விமர்சித்த முன்னாள் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாபெரும் பேரணி நடந்தது. அதில் முன்னாள் எம்.பி.க்கள் பலா அல் சவ்வாக், காலீத் அல் தஹஸ் மற்றும் பதர் அல் தாஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். பல முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற பேரணியில் முன்னாள் எம்.பி.க்கள் குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மன்னருக்கு எதிராக கோஷமிட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குவைத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக மன்னரை பற்றி ட்விட்டரில் விமர்சித்த முகமது அல் அஜ்மி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மன்னரை விமர்சனம் செய்த 300க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரை விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதற்கு சமூக வளைதலங்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications