உங்களையெல்லாம் சாட்டையால் அடிக்கனும்... பாதுகாவலரிடம் கொதித்த மமதா பானர்ஜி

Subscribe to Oneindia Tamil

Mamata Banerjee
கொல்கத்தா: கார் வர சற்று தாமதமானதால் கடுப்பாகிப் போன மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தனது பாதுகாவலரிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். உங்களையெல்லாம் சாட்டையால்தான் அடிக்கனும் என்றும் திமிர்த்தனமாக பேசியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

புதன்கிழமை மாலை கொல்கத்தாவில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தார் மமதா. புத்தகத்தைப் பார்த்து விட்டுத் திரும்பிய அவர் காரில் ஏற வந்தார். ஆனால் காரைக் காணோம். கார் வர சற்று தாமதமானது. இதனால் கோபமடைந்த அவர் அங்கிருந்து தனது பாதுகாவலரிடம் நீங்கள்ளாம் என்ன பண்றீங்க.. சாட்டையால்தான் அடிக்கனும், அப்பதான் திருந்துவீங்க என்று சுள்ளென விழுந்தார்.

மேலும் அவர் கோபத்துடன் பேசுகையில், இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் செய்தீர்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.

மமதாவிடம் இப்படித் திட்டுவாங்கியவர் அவரிடம் நீண்ட காலமாக தனிப்பட்ட பாதுகாவலராக பணியாற்றி வரும் குசும் குமார் திவிவேதி என்பவர் ஆவார்.

மமதாவின் இந்த கோபப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+