புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனை மற்றும் கல்லூரியாக மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர். வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் கே.என். பாஷா, என். பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த மாதம் 24ம் தேதி தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செயய்ப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டடிடத்தை மருத்துவமனையாக மாற்ற மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஆர். வீரமணி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
இது போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திற்கு இல்லை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைதான் ஒப்புதல் அளிக்க முடியும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், ஆர். நாகேந்திரன் ஆகியோர் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஆர்.வீரமணி தொடர்ந்துள்ள இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த கட்டிடத்தை மருத்துவமனையாக அரசு எப்படி மாற்றியது? எனவே அந்த (புதிய தலைமை செயலகம்) கட்டிடத்தில் எந்த மாற்றங்களும் செய்யக் கூடாது. மருத்துவமனை அமைக்கும் விதமான நடவடிக்கைகளும் செய்யக் கூடாது. அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த கட்டிடத்தில் மாற்றங்கள் செய்ய இடைக்கால தடை விதிக்கிறோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலக கட்டிடம் ஏற்கனவே மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications