ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்ன குஷ்பு வீடு மீது தாக்குதல்... கல்வீச்சு!

சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ள நடிகை குஷ்பு, "திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.
திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார். இந்த பேட்டி அடங்கிய இதழ் இன்று வெளியான சில மணி நேரங்களில் திமுகவினரிடையே பரபரப்பு கிளம்பியது.
ஸ்டாலின் ஆதரவாளர்கள் 50 பேர், சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு திரண்டனர். குஷ்புவை கடுமையாகத் திட்டிய அவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர். இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன.
இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களைக் கலைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர் சி இருவரும் வீட்டில் இல்லை. குஷ்புவின் இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களிடம் போனில் கதறி அழுதபடி குஷ்பு நடந்தவற்றை விசாரிததார்.
இது தொடர்பாக கைதானவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications