இங்கிலாந்தில் அப்பாக்களுக்கும் பிரசவ விடுமுறை… ஜாலியாக பேபியை கவனிக்கலாம்…
லண்டன்: குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்களுக்கு மட்டுமல்ல புதிதாக அப்பாவான ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் புதிய சட்டம் இங்கிலாந்தில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் அப்பாக்களும் ஜாலியாக இறங்கலாம். பிரசவ வேதனையில், அயற்சியில் இருக்கும் மனைவிக்கு அன்பாய் அனுசரனையாய் உதவி செய்யலாம்
ஒரு பெண் தாயாவதில் இருந்து குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்குவது வரைக்கும் தந்தையும் உதவி செய்யவேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு குழந்தைகளை பராமறிப்பதில் எளிதாக இருக்கும்.
பிரசவ காலம் வந்தாலே பெண்கள் தாய்வீட்டிற்குப் போய் மூன்று மாதகாலம் இருந்து விட்டு வருவதும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கவேண்டும் என்பதனால்தான். குழந்தைகளை கூட இருந்தே பார்த்து வளர்ப்பதற்காக அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புது சட்டம்
இங்கிலாந்தில் பிரசவமான மனைவியையும், பிறந்த குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள புது விதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ இனி அப்பாக்களும் அம்மாவிற்கு உதவியாக இருந்து குட்டிப்பாப்பாக்களை கவனித்துக் கொள்ளலாம். இந்தியாவிலும் இதுபோன்ற சட்டம் அமல்படுத்தப்பட்டால் பிரசவ காலத்தில் தனியாக கஷ்டப்படும் இளம் தாய்மார்களுக்கு உதவியாக இருக்கும் இல்லையா?












Click it and Unblock the Notifications