தேமுதிக எம்.எல்.ஏக்கள் அடிக்கப் பாயும் அளவுக்கு அப்படி என்ன பேசினார் திட்டக்குடி தமிழழகன்?

அவர் இன்று சட்டசபையில் பேசிய பேச்சால் கோபமடைந்துதான் அவர்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவரைக் காப்பாற்றப் போய் மைக்கேல் ராயப்பன் சிக்கி அடிவாங்கி விட்டார்.
தமிழழகன் பேசிய பேச்சு இதுதான்...
நான் முதல்வர் அம்மாவை சந்தித்து என் தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை வைத்தேன். அவற்றை அம்மா கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது அவருக்கு தெய்வ சக்தி பாய்ந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை எனது திட்டக்குடி தொகுதியில் கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
என் தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 400 குடும்பத்துக்கு இலவச பட்டா கேட்டு, அந்த கோரிக்கையும் நிறைவேறி உள்ளது. பெரியபாளையம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ரூ. 22 கோடி ஒதுக்கி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இது மட்டுமல்ல தொகுதியில் என்ன பிரச்சினை என்றாலும் தன்னை நேரில் சந்திக்க முதல்வர் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நான் அம்மாவை சந்தித்த பிறகு தொகுதி மக்களிடம் எனக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. மற்றவர்களும் இந்த வழியை பின்பற்றினால் அவர்கள் தொகுதிக்கு கிடைக்க வேண்டியவை கிடைத்து முன்னேற்றம் அடையும். விரைவில் எனது திட்டக்குடி தொகுதி ஒரு முன் மாதிரி தொகுதியாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே நீங்களும் இந்த வழியை பின்பற்றி அம்மா பக்கம் வந்தால் உங்கள் தொகுதியும் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.
இதுதான் தமிழழகன் பேசிய பேச்சு. இதன் பிறகுதான் தேமுதிகவினர் கோபமடைந்து அவர் மீது பாய்ந்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications