For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்சல் குருவுக்கு நீதி கிடைக்கவில்லை- கிலானி; மோடி வரவேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: அப்சல் குருவுக்கு நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்று நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில்சிக்கி கைதாகி பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கிலானி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர் இந்த கிலானி. காஷ்மீ்ரைச் சேர்ந்தவர். இவர் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது வருத்தம் தருகிறது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு தரப்படவில்லை. அவரது தரப்பு வாதம் முழுமையாக கேட்கப்படவில்லை.

இப்போது நடந்திருப்பது சட்டவிரோத கொலையாகும். அப்சல் குருவின் மனைவிக்குக் கூட தெரிவிக்காமல் அவரைத் தூக்கில் போட்டுள்ளனர் என்றார் கிலானி.

நரேந்திர மோடி வரவேற்பு

இதற்கிடையே, அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், தாமதமானாலும் சரியான செயல் நடந்துள்ளது. தாமதத்திற்கு இது பரவாயில்லை என்று கூறியிருந்தார்.

English summary
Security was tightened in New Delhi in the wake of Guru's hanging. All the city police stations were put on high alert and additional forces were deployed in the minority-dominated areas across the city, police sources said. Meanwhile, SAR Gilani, another accused in the Parliament attack case who was later acquitted, said Guru never got a fair trial. According to him, whatever was done was extra-judicial and his wife was also not informed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X