அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் டிவி, எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் தடை
ஸ்ரீநகர்: டெல்லி திகார் சிறையில் அப்சல்குரு தூக்கிலிடப்படும் விசயம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த விஷயம் தெரியாதபடி பார்த்துக் கொண்டார்கள். கேபிள் டி.வி., எஸ்எம்.எஸ்., மற்றும் சமூக வலைத்தளங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சிறிது நேரம் தடை செய்யப்பட்டிருந்தது.
வாய்ப்பு கொடுக்கவில்லை
அப்சல் குருவின் குடும்ப உறுப்பினர்களுக்குகூட இன்று அவர் தூக்கிலடப்படும் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். குருவின் சகோதரர் அஜாஸ் குரு, "அப்சல் தூக்கிலப்படும் முன் அவரை கடைசியாக ஒருதடவை பார்ப்பதற்கு குடும்பத்தினர் விரும்பியிருந்தோம். ஆனால், அந்த வாய்ப்பு தரப்படவில்லை" என்று வருத்தத்துடன் கூறினார்.
கடையடைப்பு
காஷ்மீரின் தோடா, கிஷ்த்வார் பகுதிகளில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், இன்று அடைக்கப்பட்டுள்ளன. அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக இவர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.
கண்காணிப்பில் காஷ்மீர்
கிஷ்த்வார் பகுதி போலீஸ் துணை கமிஷனர் ஆர்.கே.ஷெவான், தோடா பகுதி போலீஸ் சீனியர் அதிகாரி ஆரிஃப் ரிஷூ ஆகிய இருவரும், "நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
2001 டிசம்பர் 13 ஆம் தேதி உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றம் என்ற அடையாளங்கள் தாங்கிய காரில் 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.
இதேநேரத்தில நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. வெடிகுண்டுகளை உடலில் பொருத்திவந்த ஒரு தீவிரவாதியை சுட்டபோது வெடித்துச்சிதறியதால் அங்கு பதற்றம் கூடியது.தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 5 காவல்துறையினர்,.நாடாளுமன்ற காவல்பணியில் ஈடுபட்டவர்களில் ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டப் பராமரிப்பாளர் ஆகியோர் உயிரிழந்தனர். 18 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர்.கிட்டதட்ட அரைமணிநேரம் இந்த தாக்குதல் சம்பவம் நீடித்தது.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள் இருந்தபோதும், யாரும் காயமின்றி உயிர்தப்பினர். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் டெல்லியில் பேருந்து ஒன்றில் இருந்த அப்சல் குரு உடனடியாக கைது செய்யப்பட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications