அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது சரியான செயல் - பாஜக
டெல்லி: அப்சல் குருவைத் தூக்கிலிட்டது சரியான செயல். இதை பாஜக வரவேற்கிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாமதமாக வழங்கப்பட்டாலும் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்கிறோம். அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். நீண்ட காலமாக இதற்காக அவர்கள் காத்திதருந்தனர். அவரை தூக்கிலிட்டது மிக சரியான முடிவு. இந்த விஷயத்தில் நாங்கள் எப்போதும் அரசுக்கு உறுதுணையாகவே இருந்து வருகிறோம் என்றார்.
கட்சியின் இன்னொரு செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இது தீவிரவாதிகளுக்கு நல்ல எச்சரிக்கையாக அமையும். மக்களிடமிருந்து அதிகரித்து வந்த நெருக்குதலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு எடுத்துள்ளது என்றார்.
மூத்த பாஜக தலைவரும், நாடாளுமன்றத் தாக்குதலின்போது உயிர் தப்பியவருமான நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், தீவிரவாதிகளுக்கு மதம், ஜாதி என்று எதுவுமே கிடையாது. தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் தீவிரவாதிகள்தான். அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா, இல்லையா என்பதுதான் முக்கியம் என்றார்.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications