For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அரசு திட்டம்

Google Oneindia Tamil News

Power
தூத்துக்குடி: நடப்பு நிதியாண்டில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் சோலார் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. வங்கி நிர்வாக இயக்குனர் நாகேந்திரமூர்த்தி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார், வங்கி இயக்குனர் அரவிந்த் குமார், வங்கி பொது மேலாளர் ராய் சுரேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி பேசியதாவது,

சோலார் மின் உற்பத்தியில் அரசு 30 சதவீத மானியம் வழங்குகிறது. ஒன்று முதல் 1 கிலோவாட் வரை மேற்கொள்ளப்படும் மின் உற்பத்திக்கு இந்த மானியம் கிடைக்கும். இது குறித்த விண்ணப்பங்களை மின்வாரிய இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நடப்பு நிதியாண்டில் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 500 மெகாவாட் மின்சாரம் சோலார் மூலம் பெற தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
TN government has planned to produce 1,000 MW power from private companies in the current financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X