For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பமேளாவில் நித்தியானந்தா... புனித நீராடினார்!

Google Oneindia Tamil News

அலகாபாத்: கும்பமேளாவில் கலந்து கொண்ட நித்தியானந்தா அங்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

அலகாபாத் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று அங்கு புனித நீராடுவதற்காக கோடானு கோடி மக்கள் குவிந்துள்ளனர். பெரும் திரளான சாதுக்கள், பிரபலமான சாமியார்கள் உள்பட பல தரப்பினரும் குவிந்துள்ளனர்.

அதேபோல சாமியார் நித்தியானந்தாவும் அங்கு தனது ஆதரவாளர்கள் சகிதம் முகாமிட்டிருந்தார். தினசரி அவரது முகாமில் பஜனைகளும் நடந்தன. இன்று அவர் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய புனித ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

Nithyananda
மெளனி அமாவாசையையொட்டி இந்த புனித நீராடல் நடைபெற்றது. மகா கும்பமேளாவின் முக்கிய நிகழ்ச்சி இந்த புனித நீராடல் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்த பாவமெல்லாம் போய் விடும்

இன்று புனித நீராடுவது மகா கும்பமேளாவில் மிக முக்கியமாக கருதப்படுகிறுது. காரணம்,யாராக இருந்தாலும் இன்று புனித நீராடினால் அவர்கள் செய்த பாவமெல்லாம் போய் விடுமாம். நித்தியானந்தாவுடன் அவரது ஆதரவாளர்கள் பலரும் கூட திரளாகதிரண்டு வந்திருந்தனர்.

English summary
Swami Nithyananda took a holy dip on the occassion of 'Maun Amavasya,' in Triveni Sangam, during the Maha Kumbh Mela in Allahabad on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X