பொட்டு சுரேஷ் கொலை- அட்டாக் பாண்டியுடன் மேலும் மூவருக்கு போலீஸ் வலை
மதுரை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாகி இருக்கும் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டியுடன் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொட்டு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடக்கத்தில் வாயை திறக்க மறுத்தவர்கள் போலீசாரின் 'தீவிர' விசாரணையில் தற்போது உண்மைகளைக கூறி வருகின்றனர்.
இக்கொலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள்தான் இந்தக் கொலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று 7 பேரிடம் விவரித்திருக்கின்றனர்.
மேலும் கொலையாளிகள் 18 சிம்கார்டுகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சிம்கார்டுகளில் பலவற்றை கொலையை செய்து முடித்தவுடன் அழித்தும் இருக்கின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், பட்டாக் கத்திகள் ஆகியவற்றை மறைத்து வைத்த இடத்தையும் கொலையாளிகளில் ஒருவரான சபாரத்தினம் காட்டிக் கொடுக்க போலீசார் அவற்றையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் அட்டாக் பாண்டியுடன் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications