அலகாபாத் மகா கும்பமேளாவில் 'தொலைந்து' போனவர்கள் எண்ணிக்கை 3 லட்சம்!
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தற்போது அலகாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம் பக்தர்களும் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர்.
இந்த கும்பமேளாவுக்கு வந்து கூட்ட நெரிசலில் காணாமல் போனோரை பற்றி ஒலி பெருக்கி மூலம் அறிவித்து குடும்பத்தினருடன் இணைத்து வைக்க உதவி மையங்கள் அலகாபாத் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்கள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்த உதவி மையங்கள் தெரிவித்திருக்கும் தகவலின்படி இதுவரை 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர்.
மவுனி அமாவாசை நாளான நேற்று மட்டும் சுமார் 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இவர்களில் 97 ஆயிரம் பேர் காணவில்லை. இப்படி கும்பமேளா காலங்களில் இதுவரை தொலைந்தோர் எண்ணிக்கை சுமார் 16 லட்சம் பேர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இன்னும் பலர், கும்பமேளா நடைபெறும் புண்ணிய தலங்களில் தங்கள் வீட்டு முதியவர்களை கொண்டுவந்து விட்டு விடும் சம்பவங்களும் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications