புதுக்கோட்டையில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கண்ணன் என்ற பயிற்சி வழக்கறிஞரை (வயது 22) மர்ம நபர்கள் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் அங்குள்ள நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். இன்று காலை தமது வீட்டில் இருந்து நீதிமன்றத்துக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
மச்சுவாடி இரும்பு ஆணி தொழிற்சாலை அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் கண்ணனின் வாகனத்தை மறித்திருக்கின்றனர். அவர்கள் சட்டென மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் கண்ணனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கண்ணனின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்திருக்கின்றனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.












Click it and Unblock the Notifications