மாலத்தீவில் வீடு புகுந்து இந்திய பெண் கற்பழிப்பு
மாலத்தீவு: மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து வரும் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அலிப் தால் அடோல் தங்கெட்டி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். அதேசமயம், இதுதொடர்பான விவரத்தை வெளியிட அவர்கள் மறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியை. அங்குள்ள பள்ளியில் பணியாற்றி வந்தார். இருப்பினும் சில ஆண்டுகளாக அவர் ஆசிரியை பணியில் ஈடுபடவில்லை. மாறாக வீட்டோடு இருந்து வந்தார். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அந்தப் பெண்ணுக்கு கடும் மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இப்பெண்ணை கற்பழித்துள்ளான் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை..
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications