ராஜிவ் கொலையாளிகள் தூக்கை நிறைவேற்றாதது ஏன்?: சுஷில்குமார் ஷிண்டே விளக்கம்

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி அப்சல் குருவை அவசரமாக தூக்கிலிட்டதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்சல் குருவின் கருணை மனுவை கடந்த 3-ந் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனால் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் 4-ந் தேதி நான் கையெழுத்திட்டேன். அதைத்தொடர்ந்து, தூக்கில் போடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 7-ந் தேதி இரவு, அப்சல் குருவின் மனைவிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கடிதம் அனுப்பப்பட்டது. 8-ந்தேதி இரவு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு நானே தகவல் தெரிவித்தேன். 9-ந் தேதி காலை அப்சல் குருவை தூக்கில் போடப் போவதாக உமர் அப்துல்லாவிடம் முதல்முறையாக தெரிவித்தேன். அப்சல் குரு விவகாரம் உணர்வுப்பூர்வமானது என்பதால் பகிரங்கமாக செயல்ப்டவில்லை.
ராஜிவ் கொலையாளிகள்
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட கைதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் மனுவும் நிலுவையில் உள்ளன. இதனால் மரண தண்டனை கைதிகளை காலவரிசைப்படியெல்லாம் தூக்கிலிட முடியாது.
யாசின் மாலிக்
பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதுடன் ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
தெலுங்கானா
தெலுங்கானா பிரச்சினை முடிந்து போன ஒன்றல்ல. இன்னும் விவாதித்து வருகிறோம். அப்படியோ அல்லது இப்படியோ ஏதாவது ஒரு முடிவு எடுப்போம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications