மன அழுத்தம் இருந்தா தலையணையால அடிச்சிக்கலாம்… !

உயரதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளானவர்களும், கல்லூரிகளில் பேராசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளான இளைஞர்களும் இன்றைக்கு கடுமையான மனநெருக்கடிக்கு ஆளாவதாக கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தெருக்களில் கூடி தலையணைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி தங்களின் மன அழுத்தத்தினை தணித்துக் கொள்கின்றனர்.
சீனாவில், சமீபகாலமாக, நடந்து வரும் "பில்லோ பைட்' என அழைக்கப்படும் தலையணைச் சண்டை மூலம் மன அழுத்தம் குறைகிறது என்பது பெரும்பாலான இளைய தலைமுறையினரின் கருத்தாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில், ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது.
குறிப்பிட்ட, நாளில், இளைஞர்கள் அனைவரும், வீதிக்கு வந்து, தலையணைகளால் ஒருவரை ஒருவர், விளையாட்டாக தாக்கிக் கொள்கின்றனர். தலையணைகளில் இருக்கும் பஞ்சுகள், பிய்ந்து போகும் வரை, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். அப்போது சிரிப்பும், உற்சாகமும் தொற்றிக்கொள்வதால் மன அழுத்தம் பறந்து போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருமுறை தலையணைகளால் தாக்கிக் கொள்வதன் எப்படி மன அழுத்தம் சரியாகும் என்று கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் பதில் வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, சண்டைக்கு கொண்டு வரும் தலையணைகளின் மீது, உயரதிகாரிகளின் பெயர் அல்லது ஆசிரியர்களின் பெயரை எழுதி விடுவார்களாம், இதன் மூலம், அவர்களை பழி வாங்கி விட்ட உணர்வு எங்களுக்கு ஏற்படும்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் போய் விடும்...' என பதில் அளிக்கின்றனர் சீன இளைஞர்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டால் தியானம் செய்யுங்கள்... நல்ல உணவு சாப்பிடுங்கள்... உடற்பயிற்சி செய்யுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால் சீனாவிலோ தலையணையை கொண்டு சண்டை போட்டு மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வது ஆச்சரியமான விசயம்தான்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications