4 வீரப்பன் கூட்டாளிகளும் 14 நாட்களில் தூக்கிலிடப்படுவர் -கர்நாடக சிறைத்துறை டிஜிபி
Subscribe to Oneindia Tamil

வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதையடுத்து அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர்.
இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககந்தீப் கூறுகையில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் என்று தெரிவித்தார்.
பெல்காம் சிறையில்
4 பேரும் பெல்காம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். அங்கேயே இவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்காம் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications