Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டப்பகலில் பயங்கரம்... ஆந்திராவில் கல்லூரி அதிபர் மனைவி- மகள் குத்திக் கொலை: கொலையாளிகள் பிடிபட்டன

Subscribe to Oneindia Tamil

நெல்லூர்: ஆந்திராவில் பட்டப்பகலில் பார்மசி கல்லூரி அதிபர் வீட்டினுள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்கள் தாய், மகளை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூரைச் சேர்ந்தவர் தினகர் ரெட்டி. இவர் பார்மசி கல்லூரி நடத்தி வருகிறார். தினகர் ரெட்டி நெல்லூர் அரிநாதபுரத்தில் புதிய வீடு கட்டி மனைவி சகுந்தலா (42), மகள் பார்கவி (22) ஆகியோருன் வசித்து வருகிறார்.

நேற்று தினகர் ரெட்டி கல்லூரிக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் அவரது மனைவி சகுந்தலாவும், மகள் பார்கவியும் தனியாக இருந்தனர். மதியம் 11 மணி அளவில் புதிய வீட்டில் உள் அலங்காரம் செய்த இந்தியாஸ் என்பவர் தனது கூட்டாளி முரளி மனோஜ், வம்சி கிருஷ்ணா ஆகியோருடன் வந்தார்.

வீட்டில் உள் அலங்காரம் செய்ததில் தினகர் ரெட்டி ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று சகுந்தலாவிடம் இந்தியாஸ் கேட்டுள்ளார். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, நீ கணவரிடம் கேட்டுக்கொள் என்று கூறவே, இந்தியாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதுபோல் நடித்து திடீர் என வாசல் கதவை பூட்டினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா சத்தம்போட இந்தியாஸ் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். நகையை தர மறுக்கவே சகுந்தலாவை கத்தியால் குத்தியுள்ளான்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு உள்அறையில் படித்துக் கொண்டு இருந்த மகள் பார்கவி ஓடி வந்தாள். அவளையும் 3 பேரும் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் தாய்-மகள் இருவரும் உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் வீட்டில் புகுந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தினகர் ரெட்டி உறவினர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். இதனால் கொலையாளிகள் அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் தினகர் ரெட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தினகர் ரெட்டி தனது கல்லூரி ஊழியர் பிரவின் என்பவருடன் வீட்டுக்கு வந்தார். வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தபோது உள்ளே மனைவியும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனால் பிரவின் வீட்டு பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்தார். அவரை வீட்டினுள் பதுங்கி இருந்த கொள்ளையன் இந்தியாஸ் கத்தியால் குத்தினார். அதற்குள் பொது மக்கள் சுற்றி வளைத்து இந்தியாசை பிடித்தனர்.

அவனது கூட்டாளிகள் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டனர். கதவை உடைத்து அவர்களையும் பிடித்தனர். கொலையாளிகள் 3 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் நெல்லூரில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூர் நகரம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+