ஹெலிகாப்டர் ஊழல்: 'சாப்ட்வேர்' பெயரில் இந்தியாவில் தரப்பட்ட ரூ. 470 கோடி லஞ்சம்!

Subscribe to Oneindia Tamil

AgustaWestland
டெல்லி: இத்தாலிய ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழலில் லஞ்சப் பணமான ரூ. 470 கோடி சாப்ட்வேர் கணக்கில் காட்டப்பட்டு இடைத் தரகர்களுக்கு தரப்பட்டுள்ளது.

இத்தாலியின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து ரூ. 3,546 கோடியில் 12 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படை வாங்கியது. இதில் ரூ. 470 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளது.

முன்னாள் இந்திய விமானப் படைத் தளபதியான எஸ்.பி.தியாகியின் 3 உறவினர்களான ஜூலி, டோஸ்கோ, சந்தீப் தியாகி ஆகியோருக்கும், தியாகியின் உறவினர்களுக்கு நெருக்கமான அமெரிக்கரான குய்டோ ரால்ப் ஹஸ்சேக் மற்றும் கார்லோ கெராஸா ஆகியோருக்கும் இந்த லஞ்சம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.

இந்தப் பணம் 2010ம் ஆண்டு (ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு) பின்மெக்கானிகாவின் இங்கிலாந்து துணை நிறுவனம் மூலமாக இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை துனீசியா நாட்டின் ஒரு வங்கி மூலமாக தந்துள்ளது பின்மெக்கானிகா.

இந்த ஹெலிகாப்டர்களுக்கான சில சாப்ட்வேர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணம் என்ற பெயரில் இந்தப் பணத்தை பின்மெக்கானிகா இவர்களுக்குத் தந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சாப்ட்வேர் கட்டணம் என்ற பெயரில் இந்தப் பணம் தியாகியின் உறவினர்களின் கணக்குக்கு வந்ததால் இந்த லஞ்சப் பணம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினரின் கண்ணை உறுத்தவில்லை.

இதையும் ஒரே நேரத்தில் தரவில்லை. 2007ம் ஆண்டு ஆண்டு ஆரம்பித்து கடந்த ஆண்டு வரை இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்துள்ளது.

இதற்காக துனீசியாவிலும் இந்தியாவிலும் ஐடிஎஸ் துனீசியா- ஐடிஎஸ் இந்தியா இரு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்குள் காண்ட்ராக்டும் போடப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் சாப்ட்வேர் வேலைகள் தொடர்பாக பணப் பரிமாற்றம் செய்வதாக கணக்குக் காட்டப்பட்டது.

மேலும் இந்தியாவில் அரசியல் கட்சிகளுடனும் அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்தவும், தங்களது டீலுக்கு உதவவும் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் கிரிஸ்டியன் என்பவரும் பயன்படுத்தப்பட்டுள்ளார். இதற்காக இவருக்கு 30 மில்லியன் யூரோ தரப்பட்டுள்ளது. இவர் இங்கிலாந்தில் Global Service Trade Commerce என்ற நிறுவனத்தையும், துபாயில் Global Service FZE என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் இந்தியாவில் உள்ள தனது வர்த்தகத் தொடர்புகளை வைத்து பின்மெக்கானிகாவுக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+