PHH-AAY..NPHH..எந்த ரேசன் கார்டு வச்சுருந்தாலும் ஓகே! ‘இந்த’ தேதியை மட்டும் மறக்காதீங்க மக்களே! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக வருகின்ற 14.11.2026 அன்று குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதே போல், சென்னையிலுள்ள 19 மண்டலங்களில்அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கவுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவு துறை மட்டுமல்லாது உணவு மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு வழங்கள் துறையின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

Tamil Nadu Ration Card Grievance Camp

சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. இவற்றில் 33 ஆயிரம் கடைகள் நேரடியாக கூட்டுறவுத்துறை மூலமே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பின் மூலம் மக்களுக்கு தற்போது உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் 18000 முழு நேரரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9000 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. ஒருவேளை ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதியாக இருந்தால் முழு நேரமாக 4000 ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றன 7 கோடி மக்களுக்கு அன்றாட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. PHH (Priority Household / முன்னுரிமை குடும்ப அட்டை - அரிசி அட்டை), PHH-AAY (Antyodaya Anna Yojana / அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை), NPHH (Non-Priority Household / முன்னுரிமை பட்டியலில் இல்லாத அரிசி அட்டை) ஆகியவை புழக்கத்தில் உள்ளன.

இதுமட்டுமல்லாமல், NPHH-S (Sugar Card / சர்க்கரை அட்டை - வெள்ளை அட்டை), No-Goods Card (பொருட்கள் அல்லாத அட்டை) என ஐந்து வகையான அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற அட்டைகள் வைத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் (14.11.2026) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னையிலுள்ள 19 மண்டலங்களில்அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கவுள்ளது. இதில், காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில், டும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/நகல் அட்டை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கலாம்.

கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனு அளிக்கலாம். இதில், பொதுமக்கள் அனைவரும் மேற்கண்டவாறு நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+