"கெஜ்ரிவாலை கொன்னுடுவோம்.. ரூ.7 கோடியை மொத்தமா எடுத்து வை.." பிஷ்னோய் கேங் கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.. ரூ.7 கோடி பணம் தர வேண்டும் எனவும் இல்லையென்றால் கெஜ்ரிவாலையும் அவரது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலையும் கொலை செய்துவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை தொடர்ந்து மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளது.

டெல்லியின் திலக் நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது தனக்கு வெளிநாடுகளில் தொடர்பு இருப்பதாக சொல்லி கொண்ட ஒருவர், தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர் என சொல்லிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜர்னைல் சிங் புகாரளித்துள்ளார்.

Kejriwal Death Threat Lawrence Bishnoi Arvind Kejriwal

ரூ.7 கோடி

இது தொடர்பாக கடந்த நவம்பர் 6ஆம் தேதியே பஞ்சாப் மொஹாலி போலீசாரிடம் புகாரளித்ததாகவும் ஜர்னைல் சிங் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் ரூ.7 கோடி கேட்டதாகவும் பணத்தை கொடுக்காவிட்டால் கெஜ்ரிவாலையும் அவரது மகள் ஹர்ஷிதாவையும் கொலை செய்துவிடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொஹாலி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த சுனில் குமார் என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பருடன் தொடர்புடைய அழைப்பு விவரங்கள், ஐபி அட்ரஸ், செல்போன் இருந்த இடம் தொடர்பான டேட்டா உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜர்னைல் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் உள்ளது. பகவந்த் மான் முதல்வராக இருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தான் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் முக்கியமான க்ரைம் கும்பல்களில் ஒன்றாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருக்கிறது. கடந்த காலங்களில் பணம் பறிப்பு, துப்பாக்கி சூடு மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் இப்போது சிறையில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடியே தனது கேங்கை இயக்கி வருகிறாராம். மற்றொரு கேங்ஸ்டரான கோல்டி பிரார் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகளுடன் இணைந்து, பல்வேறு மாநிலங்களில் துப்பாக்கிச் சூடு, ஆள் கடத்தல் உள்ளிட்டவற்றை இந்த கேங் செய்து வருகிறது.

யார் இவர்

பஞ்சாபில் கல்லூரி அரசியலில் இருந்து க்ரைம் உலகிற்குள் நுழைந்த லாரன்ஸ் பிஷ்னோய், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தபடியே கோல்டி பிரார் மற்றும் அன்மோல் பிஷ்னோய் போன்ற கூட்டாளிகளின் உதவியுடன் தனது நெட்வொர்க்கை இயக்கி வருகிறார். சுமார் 700க்கும் மேற்பட்ட ரவுடிகளை கொண்ட இந்த கும்பல், இந்தியா மட்டுமின்றி கனடா மற்றும் அமெரிக்காவிலும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

சல்மான் கான்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் அரசியல்வாதி பாபா சித்திக் ஆகியோரின் படுகொலைகளுக்கு இவர்கள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து இந்த கும்பல் தான் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் டைகர் ஷெரீப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் இந்த கும்பலே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த கும்பல் இப்போது கெஜ்ரிவாலுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+