ட்ரோலாகும் அனிருத்தின் டிரஸ்.. ஆனால் இதை கவனிச்சீங்களா? கல்யாண உடையில் இருக்கும் விஷயம்!
சென்னை: அனிருத் காவ்யாமாறன் கல்யாண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். கிரீஸ் நாட்டில் நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டதும் கவனம் பெற்றது. ஆனால் திருமண புகைப்படங்களில் இன்னொரு விஷயத்தையும் ரசிகர்கள் கவனித்து இருக்கின்றனர். அது அனிருத் மற்றும் காவியாவின் உடைகள் தான். அதிலும் அனிருத் உடையை சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். வேஷ்டிக்கு கோட் போட்டு இருக்கிறாரே என்று சில கிண்டல் செய்தாலும் அந்த உடை பற்றிய தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

அனிருத் கல்யாண டிரஸ்
பொதுவாக வெளிநாட்டில் நடக்கும் டெஸ்டினேஷன் திருமணம் என்றாலே மணமக்கள் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் உடையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அனிருத் காவியா ஜோடி அப்படி செய்யவில்லை. வெளிநாட்டில் திருமணம் நடந்தாலும் இந்திய பாரம்பரிய உடைய தேர்வு செய்து, அதை மாடர்ன் டச்சை சேர்த்து இருக்கிறார்கள். திருமணத்தின் போது அனிருத் ஐவரி நிறத்தில் சில்க் குர்தா அதற்கு பொருத்தமான வேஷ்டி அணிந்திருந்தார். ஆனால் அந்த உடையில் ஹைலைட் வேஷ்டியோ, சட்டையோ கிடையாது அதற்கு மேல் அவர் அணிந்திருந்த நீளமான எம்ப்ராய்டிங் ஜாக்கெட் தான்.
அந்த ஜாக்கெட்டில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் பாரம்பரிய உடைக்கு ஒரு மாடர்ன் தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல ஐவரி மற்றும் லேசான பீச் நிற கலவையும் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. வழக்கமாக மணமகன் கோட் சூட் என்று இல்லாமல் வேஷ்டி உடன் இப்படி ஒரு ஜாக்கெட்டை அணிந்திருந்ததும், அதை வைத்தே சிலர் ட்ரோல் செய்து வந்தாலும் ரசிகர்கள் அந்த டிரஸ்ஸில் இருக்கும் வேலையை பாருங்கப்பா என்று கூலாக கமெண்ட் கொடுக்கிறார்கள்.
காவியா மாறன் ஆடை
அதுபோல மணப்பெண் காவியா மாறன் சாப்டான பிளஸ் பிங்க் நிறத்தில் நீளமான லெகங்காவை அணிதிருந்தார். அந்த உடை முழுவதும் பூ வேலைப்பாடுகள், சீக்வென்ஸ் என நுணுக்கமான அலங்காரங்கள் இடம் பெற்றிருந்தன. தூரத்தில் இருந்து பார்க்கும்போதும் அந்த உடையின் வெளிப்பாடுகள் தனியாக தெரியும் அளவுக்கு அழகாக இருந்தது. அதோடு அவர் இணைந்திருந்த டைமண்ட், கம்மல் உள்ளிட்ட அணிகலன்களும் அந்த தோற்றத்திற்கு பொருத்தமாக அமைந்திருந்தது.
இருவரின் உடை ஸ்பெஷல்
அதிகமான அலங்காரங்கள் இல்லாமல் உடை அழகையும், நகையும் தனித்தனியாக ரசிக்கும்படி ஸ்டைல் செய்திருந்தார். இவர்களின் உடையை சேர்த்து பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அனிருத் ஐவரி நிறத்தையும், காவியா பிங்க் நிறத்தையும் தேர்வு செய்திருந்தாலும் இருவரின் உடையிலும் நுணுக்கமான எம்பிராய்டிங் வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கிறது. அதைப்போல ட்ரடிஷனலான உடையையும் மாடலாக மாற்றி வைத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களிலும் அணிந்திருந்த உடையும் வித்தியாசமாகவே இருந்தது. காவியா ஷாம்பெயின் நிற கோர்செட் டாப், மோக்கா பிரவுன் நிற ஸ்கர்ட் என மாடல் தோற்றத்தில் வந்திருந்தார். அந்த உடையை பற்றி தேடல் இணையத்தில் அதிகமாக இருக்கிறது.




Click it and Unblock the Notifications
