இன்று திரிபுரா சட்டசபை தேர்தல்!- 5வது முறைஆட்சியை தக்க வைப்பார்களா இடதுசாரிகள்?

Subscribe to Oneindia Tamil

அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபைக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. 5-வது முறையாக அம்மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த 20 ஆண்டுகாலமாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறார். முதல்வராக மாணிக் சர்க்கார் இருந்து வருகிறார்.

மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 56 தொகுதிகளிலும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வார்டு பிளாக் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் களம் இறங்கியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிருகிறது. திரிபுரா பூர்வகுடிகள் தேசியவத கட்சி 11 தொகுதிகளிலும் திரிபுரா தேசிய மாநாட்டு கட்சி ஒரு தொகுதியிலுமாக காங்கிரஸ் அணியில் போட்டியிடுகின்றன.

திரிபுரா சட்டசபை தேர்தலில் மொத்தம் 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 23 லட்சத்து 52 ஆயிரத்து 505 பேர் வாக்காளர்கள்.

மாநிலத்தின் 3,041 வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவையொட்டி வங்கதேச எல்லையான 856 கி.மீ. நீளம் சீல் வைக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+