அப்பாடா... தமிழக எல்லையைத் தொட்டுவிட்டது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்!

தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கர்நாடகாவோ கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் இந்த நீரை திறந்துவிட்டது.
வழக்கமாக கர்நாடகாவில் நீர் திறந்துவிடப்பட்டால் 48 மணி நேரத்தில் தமிழக எல்லையை வந்தடையும். ஆனால் இம்முறையோ கடந்த 5 நாட்களாக தமிழக எல்லையைக் கூட எட்டிப் பார்க்கவில்லை காவிரி நீர். இதனால் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது. இதைத் தொடர்ந்து குறைந்த நீரை திறந்துவிட்டதால் கர்நாடகா மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காவிரி நீர் பிலிகுண்டுவை வந்தடைந்தது. வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காவிரியில் தமிழகத்துக்கு தொடர்ந்தும் நீரை திறந்துவிட முடியாது என்பதை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வரும் 18-ந் தேதி கர்நாடகாவின் அனைத்துக் கட்சிக் குழு நேரில் வலியுறுத்தும் என்று அம்மாநில சட்டசபையில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications