ஜெயலலிதா அவதூறு வழக்கு: விஜய்காந்த், ஈ.வி.கே.எஸ். கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Vijayakanth and EVKS Elangovan
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26-10-2012 அன்று கேப்டன் டிவியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
பேட்டி ஒளிபரப்பானது. அந்த பேட்டியின்போது விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பொன். கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஏப்ரல் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதே போன்று 23-11-2012 அன்று தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகள் நடைபெற 12 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது என்றார். அவரது பேச்சு தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் களங்கப்படுத்துவதாக உள்ளது என்று கூறி சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கையும் நீதிபதி பொன். கலையரசன் தான் விசாரித்தார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

விஜயகாந்தும், இளங்கோவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+