நெல்லையில் பயங்கரம் - கொள்ளை முயற்சியில் பெண் கொலை
நெல்லை: நெல்லையில் கொள்ளை முயற்சியின்போது ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகேயுள்ள திருநகரை சேர்நதவர் பிரைட் சிங். இவர் அரசு சுகாதார துறையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிகிறார். இவரது மனைவி அமுதாபாய். கங்கை கொண்டான் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களின் மகன் மதுரையிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். அமுதாபாயின் தாயார் ராஜம்மாள் இவர்களோடு குடியிருந்து வந்தார்.
பிரைட்சிங் இப்போது குடியிருக்கும் தெருவிலேயே ஒரு வீடி கட்டி வந்தார். கணவன் மனைவி இருவரும் தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு தான் விடு திரும்புவர். அதுவரை ராஜம்மாள் தனியாக வீட்டில் இருப்பார். நேற்று வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் இருவரும் வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ராஜம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
பிரைட்சிங் அலறிய சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துணை கமிஷனர் ராஜராஜன், கூடுதல் துணை கமிஷனர் கோயார், உதவி கமிஷனர் ராஜமன்னார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜம்மாள் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றும் நகைகள் இருக்கும் பீரோ சாவியை அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications