குடும்பத்தோடு செத்துப் போவோம்... வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் மனைவி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: எனது கணவரை தூக்கில் போட்டால் நான் எனது மகனுடன் தற்கொலை செய்வேன் என்று வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையனின் மனைவி தங்கம்மாள் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

தங்கம்மாளுக்கு தற்போது 60 வயதாகிறது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் மாதேஷை ஏற்கனவே அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்று விட்டன். 2வது மகன் பரமசிவத்துடன் தங்கம்மாள் வசித்து வருகிறார்.

தனது கணவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட செய்தியால், தங்கம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையிலல், எனது கணவர் மீசை மாதையன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவார் என்ற ஆசையில்தான் வாழ்ந்து வருகிறேன். எந்த தவறும் செய்யாத அவரை விடுரை விக்க வேண்டும். ஏற்கனவே எனது முதல் மகன் மாதேஸை அதிரடி படையினர் சுட்டு கொன்று விட்டனர். தற்போது மற்றொரு மகன் பரமசிவத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

நாங்கள் 25 ஆண்டுகளாக வறுமையில் தான் வாடுகிறோம், மூத்த மகனை இழந்த நிலையில் கணவரையும் தூக்கு மேடைக்கு அனுப்பப்படும் செய்தியை தாங்கி கொள்ள முடியவில்லை. எனது கணவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும். அவர் இல்லாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்றார் தங்கம்மாள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+