அடுத்த தூக்கு தமிழகத்திலா? இல்லை பஞ்சாப்பிலா?

ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே கருணை மனுக்கள் விவகாரத்தில் கறாராக நடந்து வருகிறார் பிரணாப் முகர்ஜி.
அஜ்மல் கசாப்பை அதிரடியாக தூக்கிலிட்ட நிலையில் ஏன் இன்னமும் அப்சல் குருவைத் தூக்கிலிடவில்லை என்று பாஜக உள்ளிட்டவை கேள்வி எழுப்பின. அதற்கென்ன தூக்கிலிட்டா போச்சு என்று அவசரம் அவசரமாக செய்தே முடித்துவிட்டனர்..
அதெப்படி அப்சல் குருவைத் தூக்கிலிடலாம்? ஏன் ராஜிவ், பியாந்த்சிங் கொலையாளிகளை தூக்கில் போடவில்லை? இப்படியெல்லாம் செலக்டிவ் தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கொந்தளித்தனர்.
இதனால் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களை தூக்கில் போடுவார்களோ என்று எண்ண வைத்த போது 4 தமிழர்களை குறி வைத்துவிட்டனர். இதன் மூலமாக செலக்டிவ் தூக்கு தண்டனையெல்லாம் இல்லையே..என்று தங்களை நிரூபித்துக் கொள்ள காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாங்கள் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று நிரூபிக்கப் போகின்றனராம்...
அடுத்தும் ராஜிவ் கொலை வழக்கு கைதிகளா? அல்லது பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கவும் தடுக்கவும் முடியாத ஒன்று.
ராஜிவ் கொலை வழக்கில் கருணை மனுக்கள் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்படும் சூழலில் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து தமிழக சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றி வழக்குப் போட்டு காப்பாற்றியிருக்கின்றனர். இந்த வழக்கின் விசாரணை ஒன்றரை மாதத்தில் முடிவடையலாம்ம் எனக் கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் கொலையாளி பல்வந்த்சிங் ரஜோனாவும் கூட தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்ட நிலையில்தான் பஞ்சாப் அரசு காப்பாற்றியது. அங்கே இன்னொருவரும் தூக்கை எதிர்நோக்கியிருக்கிறார். அவர் பெயர் புல்லர்.
புல்லரின் கருணை மனுவை தாமதமாக நிராகரித்த காரணத்தால் அவர் உச்சநீதிமன்றத்துக்குப் போனார். இந்த வழக்கோடு ராஜிவ் கொலையாளிகள் தாக்கல் செய்த வழக்கையும் உச்சநீதிமன்றம் வலிய எடுத்துக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணையும்தான் விரைவில் முடிவடைந்துவிடும்.
ஆக தாங்கள் ரொம்ப நேர்மையானவர்கள் என்று லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகும் வகையில் அடுத்த தூக்கை தமிழகத்திலோ அல்லது பஞ்சாப்பிலோ அல்லது அடுத்தடுத்து தமிழகத்திலும் பஞ்சாப்பிலும் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications