For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணை மனு பிரிவே ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து அதிரடியாக நீக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

Pranab
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தூக்கு கைதிகள் கருணை மனு பற்றிய பிரிவே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முன்பு காத்திருக்கும் கருணை மனுக்கள் பற்றிய விவரங்கள் அவரது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அனைவரது பார்வைக்காகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருந்தது.

மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டபோது இந்தப் பிரிவு குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இடம்பெற்றது. ஆனால் அடுத்தடுத்து தூக்குகள் நிறைவேற்றப்படும் நிலையில் திடீரென இந்த இணையப் பக்கம் காணாமல் போய்விட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள், கருணை மனு குறித்த பிரிவையும் இனி உள்துறை அமைச்சகமே கையாளும் என்கின்றன.

இந்நிலையில் 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் அப்போது அவருடன் பயணம் செய்த பத்திரிகையாளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

English summary
The office of the President has taken off the 'mercy petition' section from its official website and it says matters relating to the subject for public information will henceforth be dealt by the Union Home Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X